உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை கைலாசநாதர் சுவாமி கோவிலுக்கு முன்னாள் அறங்காவலர் ரூபாய் 70 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி நாகத்தை வழங்கினார்.
உளுந்தூர்பேட்டை கைலாசநாதர் சுவாமி கோவிலில் உள்ள மூலவருக்கு சாற்றுவதற்காக ரூபாய் 70 ஆயிரம் மதிப்பிலான 1கிலோ 300 கிராமில் வெள்ளி நாகத்தை முன்னாள் அறங்காவல் குழு தலைவர் சிவநாவுக்கரசு, ஜெகதீஷ் குருக்களிடம் வழங்கினார். அப்போது முக்கியஸ்தர்களான செல்லையா, ஏழுமலை, மதனகோபால், சிவசரவணன், ஜெகதீசன், ராஜசேகர் மற்றும் ஏராளமானோர் உடனிருந்தனர்.