ராமநாதபுரம் : இது குறித்து இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்ட செயலாளர் கண்ணன் சிவா கூறியதாவது:மாவட்டத்தில் இன்றும், நாளையும் (ஜூலை., 30 மற்றும் 31ல்) கொண்டா டப்படவுள்ள ஆடி அமாவாசையை முன்னிட்டு இந்துக்களின் புண்ணிய ஸ்தலங்களான ராமேஸ்வரம், சேதுக்கரை, தேவிப்பட்டினம் போன்ற கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப் பணம் செய்ய வரும் பொதுமக்களுக்காக இயக்கப்படும் பஸ்களை சிறப்பு பஸ்கள் என்று கூறி கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
திருப்புல்லாணி, சேதுக்கரை புதுக்குடி பகுதிகளில் அரசு அனுமதி பெறாமல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு மர்ம கும்பல் போலியாக ரசீது அளித்து சட்ட விரோத மாக செயல்படும் கும்பலை கட்டுப்படுத்த வேண்டும்.கடற்கரைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும், என இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் கேட்டுகொள்கிறோம். என்றார். பின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் அளித்தனர்.