மன்னரான கலீபா அல்ரஷீத்தை கண்டதும் அமைச்சர்கள் எழுந்து வரவேற்றனர். விலை உயர்ந்த வைரக்கற்களை ஆளுக்கு ஒன்றாக கொடுத்தார் கலீபா. எதற்காக மன்னர் கொடுக்கிறார் என யாருக்கும் தெரியவில்லை. ”நான் கொடுத்த வைரங்களை அடித்து உடையுங்கள்” என்றார் மன்னர். விலை உயர்ந்த வைரத்தை யாராவது உடைப்பார்களா? என தயங்கிய நேரத்தில் அபூநவாஸ் என்பவர் வைரத்தை கீழே போட்டு உடைத்தார். ” நீ மட்டும் ஏன் உடைத்தாய்?” எனக் கேட்டார் கலீபா. ”உங்களை நான் மதிக்கிறேன். தங்களின் சொல்லை மீறுவதை விட, இந்தக் கல்லை உடைப்பது எனக்கு பெரிதல்ல” என்றார். மன்னரின் சொல்லை மதித்தவர் நவாஸ் மட்டுமே! இவர் போல அரசின் சட்டங்களை மதிப்பது நம் கடமை.