மருத்துவரான இக்பாலிடம் நோயாளி ஒருவர் வந்தார். தன் உடம்புக்கு என்னவெல்லாம் செய்கிறது என பலவிதமான அறிகுறிகளை அடுக்கினார். மருத்துவரும் பரிசோதித்து விட்டு, ”எந்த நோயும் உங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் கவலைப்படுகிறீர்கள். அதற்கும் மருந்து ஒன்று இருக்கிறது. இன்று மாலை நமது ஊரில் நடக்கும் புகழ் மிக்க சர்க்கஸ் நிகழ்ச்சியை கண்டு களியுங்கள். அந்நிகழ்ச்சியில் கிரிபால்டி என்ற கோமாளி பலவித வித்தைகளைக் காட்டி வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். கவலைக்கு மருந்து சிரிப்பு ஒன்றே. சிரித்தால் கவலை பறந்து விடும்,” என்றார். “அட போங்க டாக்டர். அங்கே கோமாளி வேஷமிடும் கிரிபால்டி நான் தான்,” என்றார் நோயாளி. கவலையில்லாத மனிதர்களே உலகில் இல்லை. அதே நேரம் கவலைப்படுவதால் பயனில்லை. இறைவனிடம் நம் குறைகளை சொல்லி அமைதி தேடுவதே நல்லது.