சாத்துார் : சாத்துார் அருகே நென்மேனி புனித இஞ்ஞாசியார் ஆலய பெருவிழா தேர்பவனி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இவ்ஆலய பெருவிழா கடந்த ஜூலை 22 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து நாள் தோறும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனித இஞ்ஞாசியார் சொரூபம் ஊர்வலம், சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று 31 ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு துவங்கியது. சாத்துார் மற்றும் சுற்றுக்கிராமங் களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் காலை 11:00மணிக்கு ஆலயத்தை வந்தடைந்தது. இதையொட்டி திருவிழா சிறப்பு கூட்டுதிருப்பலியும் நடந்தது.
இதை தொடர்ந்து பகல் 12:00 மணிக்கு திருவிழா கொடி இறக்கம் நடந்தது. சாத்துார் பாதிரியார் போதகர்மைக்கேல்ராஜ் தலைமையில் விழாக் கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.