பதிவு செய்த நாள்
01
ஆக
2019
03:08
வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி, பெரிய மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா, நேற்று (ஜூலை., 31ல்) தொடங்கியது. இதற்காக, வேலநத்தம் பாவடியில், கம்பத்துக்கு மஞ்சள், குங்குமம் பூசி, பக்தர்கள் புடைசூழ, ஊர்வலமாக எடுத்து வந்து, மாரியம்மன் கோவிலில், கொடிமரத்துக்கு முன், ’ஓம்சக்தி, பராசக்தி கோஷம் முழங்க நடப்பட்டது.
இதையொட்டி, மூலவர் மாரியம்மனுக்கு புஷ்பாஞ்சலி செய்து பூச்சாட்டு வைபவம் நடந்தது. ஆக., 8ல் கொடியேற்றம், 13ல் சத்தாபரணம், 14ல், குண்டம் இறங்குதல், தேரோட்டம், 15ல் பொங்கல் வைத்தல், கம்பம் ஆற்றில் விடுதல், 16ல் வண்டி வேடிக்கை, ஆக., 17ல், மஞ்சள் நீராட்டு வைபவம், ஊஞ்சல் உற்சவத்துடன், விழா நிறைவடையும்.