திருக்கோவிலூர் சக்தி மாரியம்மனுக்கு சாகை ஊற்று விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2019 12:08
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், சந்தப்பேட்டை, ஹவுசிங் போர்டு, ஸ்ரீசக்தி மாரியம்மனுக்கு சாக்கை வார்த்தல் விழா நடந்தது.
திருக்கோவிலூர், சந்தப்பேட்டை, ஹவுசிங் போர்டில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் விழா நடந்தது. காலை 11:00 மணிக்கு நல்ல தண்ணி குளத்திலிருந்து வேண்டுதல் உள்ள பக்தர்கள் தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தனர். அம்மனுக்கு பால் அபிஷேகம், கலசாபிஷேகம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் செய்திருந்தனர்.