பழநி: ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் பக்தர்கள் வளையல் சாத்தி, அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. பழநி பெரியநாயகியம்மன்கோயிலில் திருஆடிப்பூரா விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு பெண்கள் வளையல், மஞ்சள் குங்குமம் சாத்தி வழிப்பட்டனர். இரவு அம்மன் திருவுலா வந்தார். பழநி பை-பாஸ்ரோடு இடும்பன்கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த அ.கலையம்புத்துார் கல்யாணி அம்மன் கைலாசநாதர்சுவாமி கோயிலில் கல்யாணி அம்மனுக்கு வளையல்சாத்தி, சந்தனக்காப்பு அலங்காரத்தில் லட்சார்ச்சனை நடந்தது. வளையல், மஞ்சள் குங்குமம் பிரசாதமாக வழங்கினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.