காரைக்குடி: காரைக்குடி நகர சிவன் கோயிலில் ஆடிப்பூரத்திருநாள் விழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் காலை, இரவு சுவாமி சிம்மம், காமதேனு, அன்னம், வெள்ளி கைலாசம், கோரதம், வெள்ளி ரிஷபம், யானை, குதிரை வாகனங்களில் சுவாமி எழுந்தருளுதல் நடந்தது.10 ம் நாள் ஆடிப்பூரம், 11 ம் நாள் ஆடித்தபசு விழா முடிந்து 12ம் நாள் விழாவாக நேற்று முன்தினம் இரவு நுாற்றாண்டு பழமை கொண்ட ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் திருக்கல்யாணத்தன்று வாசிக்கப்படும் தங்க நாதஸ்வர இசையில் மீனாட்சிஅம்மன் திருக்கல்யாணமும், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடந்தது.