கண்ணாடியில் முகம் பார்ப்பது ஆண்டாளுக்கு மிகவும் பிடிக்கும். கண்ணனுக்கு தன்னை பிடிக்க வேண்டுமே என ஆர்வமுடன் தலை வாரி பூமுடிப்பாள். வாசனைத் திரவியம் பூசுவாள். கழுத்தில் மாலை அணிவாள். இதற்காக ’தட்டொளி’ என்னும் கண்ணாடியைப் பயன்படுத்தினாள். திருப்பாவை பாசுரத்தில், ’உக்கமும் தட்டொளியும் தந்து’ அருளும்படி கண்ணனை வேண்டுகிறாள். வியர்வையில் மேக்கப் கலையாமல் இருக்க உக்கம் (விசிறி), முகம் பார்க்க தட்டொளி (கண்ணாடி) கேட்கிறாள். ஆண்டாள் சன்னதியின் நுழைவு வாயிலில் தட்டொளி வைக்கப் பட்டுள்ளது. வட்டமான தட்டு போன்ற அமைப்பு, கீழே நீண்ட கம்பி, அதை தாங்கும் சிறிய பீடம் இதில் உள்ளது. இந்தக் கால மேக்கப் ஸ்டாண்டுக்கு முன்னோடியாக ஆண்டாள் அன்றே தட்டொளி வைத்திருந்தாள்.