மயிலாடுதுறையிலிருந்து குடந்தை செல்லும் வழித்தடத்தில் குத்தாலம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து 6 கி.மீ. யில் உள்ளது கதிராமங்கலம். இங்கு எழுந்தருளியுள்ள வனதுர்க்கை தினமும் காசிக்குப் போய் வருவதாக ஐதிகம். இதற்கு ஏற்ப அன்னையின் கோபுர விமானத்தில் அம்பாளுக்கு நேர் எதிரே ஒரு சாண் அளவில் ஒரு துவாரம் உள்ளது. இவர் ஆகாய துர்க்கை என்றும் அழைக்கப்படுகிறாள்.