பதிவு செய்த நாள்
07
ஆக
2019
03:08
நாமக்கல்: ஆடி சஷ்டி நாளை முன்னிட்டு, நாமக்கல் முருகன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். ஆடி சஷ்டி நாள், நாமக்கல், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நேற்று (ஆக., 6ல்þ நடந்தது.
காலை, 8:00 மணிக்கு கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. மூலவருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சளால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு செவ்வரளி, மனோரஞ்சிதம் மற்றும் மல்லிகை மாலையில், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலித்தார். தீபாராதனை காட்டப் பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.