கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராசுவீதியில் உள்ள, துளுக்காணி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 3ல் சிறப்பு பூஜையுடன் துவங்கியது. அன்று அம்மனை தொட்டிலில் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று (ஆக., 6ல்) மதியம், 2:00 மணிக்கு, பூசாரிகள் கரகம் சுமந்து, நகரில் ஊர்வலமாக சென்று கோவிலுக்கு வந்தனர்.
பின்னர், ஏராளமான பெண்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு நடத்தினர். இதையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.