பதிவு செய்த நாள்
10
ஆக
2019
12:08
தேனி :மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் வரலட்சுமி விரதம், ஆடி 4 வது வெள்ளியை ஒட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், தேனி பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், வீரகாளியம்மன் கோயில், கணேச கந்தபெருமாள் கோயில், வேல்முருகன் கோயிலில் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
* தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் வரலட்சுமி நோன்பையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது. அம்மன் வரலட்சுமி அலங்காரத்தில் அருள் பாலித்தார். சிறப்பு பூஜைகளுக்கு பின் பெண்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை காமராஜர் நாடார் உறவின்முறையினர் செய்திருந்தனர்.
போடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை தீபாராதனைகள் நடந்தது.
* திருமலாபுரம் சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் வரலட்சுமி, சவுடேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது.
* குலாலர்பாளையம் காளியம்மன் கோயில், மேலத்தெரு சவுடேஸ்வரி அம்மன், நந்தவனம் காளியம்மன், சாலைக்காளியம்மன், சுப்பிரமணியர் கோயில் துர்க்கை அம்மன், புதுக்காலனி ஆதிபராசக்தி கோயில்,விசுவாசபுரம் பத்ரகாளியம்மன் கோயில், மலைமீதுள்ள வடமலைநாச்சியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
கூடலுார் மந்தையம்மன் கோயிலில் வரலட்சுமி பூஜை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மழை வேண்டியும், உடல் நலம் வேண்டியும் பெண்கள் பொங்கல் வைத்தனர். கூழ் காய்ச்சி வழங்கினர்.
கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் மகாலட்சுமி அம்மன், அங்காளபரமேஸ்வரி்அம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தனர். . துர்க்கையம்மன் கோயில், காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பெண்களுக்கு கண்ணாடி வளையல் வழங்கப்பட்டது.