வருஷநாடு: மேகமலை வனப்பகுதிக்கு உட்பட்ட பொம்முராஜபுரம் மலைப்பகுதியில் அமைந்துள்ளது பொம்மியம்மாள் கோயில்.
கண்டமனூர் ஜமின் வாழ்ந்த காலத்தில் சின்ன பொம்மி, பெரிய பொம்மி என இரு சகோதரிகள் தங்களது தாத்தா சீலமுத்தையாவுடன் ராஜபாளையம் பகுதியில் இருந்து மாடு மேயப்பதற்காக வருஷநாடு மலைப்பகுதிக்கு வந்தனர்.
பொம்மூராஜபுரம் மலையில் மாடு மேய்த்து கொண்டிருந்த போது கண்டமனூர் ஜமின் அவர் களை அழைத்து வர காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
காவலர்கள் அவர்களை தேடி சென்ற போது, அவர்கள் கண்ணில் படாமல் மேய்த்து கொண்டி ருந்த மாடுகளை கல்லாக்கி விட்டு, இருவரும் புளிய மரத்திற்குள் தெய்வமாக மறைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது முதல் வணங்கப்படுகிறது.
பொம்மியம்மாளை மனமுவந்து வணங்கினால் குழந்தை பாக்யம் வாழ்க்கையில் மன அமை தியும், தொழில்அபிவிருத்தி ஆகி நினைத்தது நடப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். வாரந் தோறும் வெள்ளிக்கிழமை வனத்துறை அனுமதி பெற்று சிறப்பு பூஜை, ஆண்டுதோறும் வைகாசியில் திருவிழா நடக்கும். ஏராளமானனோர் நேர்த்திக்கடன் செலுத்துவர்.