பதிவு செய்த நாள்
10
ஆக
2019
12:08
மடிப்பாக்கம்:மடிப்பாக்கம், சீதளா தேவி கோவிலில், ஆடி திருவிழா, நாளை (ஆக., 11ல்) கோலா கமாக நடக்க உள்ளது.சென்னை, மடிப்பாக்கம், குபேரன்நகர் விரிவு பகுதியில் அமைந்து ள்ளது, ஸ்ரீ மகா சக்தி சீதளாதேவி கோவில்.
ராகவன் குருஜியால், கோவில் நிர்மாணிக்கப்பட்டது.பிரசித்தி பெற்ற இக்கோவிலில், ஆண்டு தோறும், ஆடித் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 18ம் ஆண்டு ஆடித் திருவிழா, நாளை (ஆக., 11ல்) நடக்கிறது.நாளை (ஆக., 11ல்) காலை, 8:00 மணிக்கு மடிப்பாக்கம், காஞ்சி காமாட்சி நகர், பிரதான சாலையில் உள்ள லட்சுமி கணபதி ஆலயத்தில் இருந்து, சீதளா சித்தர் தலைமையில், 108 பால்குட வைபவம் துவங்குகிறது.
காலை, 10:00 மணிக்கு, சீதளா தேவிக்கு விசேஷ அபிஷேகமும், பால் குட அபிஷேகமும் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு கூழ் படைத்தல் நிகழ்ச்சியும், அருளாட்டம், அருளாசியும் நடக்கிறது.மாலை, 6:00 மணிக்கு, சீதளாதேவிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் வீதி உலா துவங்குகிறது. இரவு 10:00 மணிக்கு தோள் குலுங்க அருளா ட்டம், மங்க ஆரத்தியுடன் நிறைவு பெறுகிறது.ஆடி விழாவை முன்னிட்டு, இரவு, 7:00 மணி முதல், திருவாணி சண்முகத்தின், கலைவாணியின் ராகங்கள் குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி நடக்கிறது.