பதிவு செய்த நாள்
10
ஆக
2019
12:08
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆடி மாதம் நான் காவது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.பெள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை யொட்டி, லலிதா பரமேஸ்வரி அம்மனுக்கு பாராயணம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.
பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம் உள்ளி ட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. மாலையில், மாங்கல்ய பூஜை, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.சூலக்கல் மாரியம்மன் கோவிலில், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து வரலட்சுமி பூஜையை முன்னிட்டு, அம்மனுக்கு ஐந்தாயிரம் வளையல்களால் அலங்கார பூஜை நடந்தது.சுற்றுப்பகுதி கிராமங்கள், பொள்ளாச்சி, கோவை மற்றும் கேரளா வில் இருந்தும் ஏராளமான பக்கள், அம்மனை வழிபட்டு, பிரசாதம் பெற்றனர். பக்தர்களுக்கு புளிச்சாதம், ராகி கூழ் பிரசாதமாகவும், பெண்களுக்கு, பிரசாதத்துடன் மஞ்சள் கயிறும் வழங்கப்பட்டது. ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அம்மனுக்கு காலை, 6:30 மணி க்கு முதல் கால பூஜை, 11:30 மணிக்கு இரண்டாம் காலம், மாலை, 4:00 மணிக்கு மூன்றாம் காலம் மற்றும் மாலை, 6:30 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது. கணபதிபாளையம் கவுமாரி பத்திரகாளியம்மன் கோவிலில், பராசக்தி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு, மஞ்சள் புடவைகள், வளையல்கள் வழங்கப்பட்டன.
கோட்டூர், பழனியூர் மாகாளியம்மன் கோவில் மற்றும் கோட்டூர் மலையாண்டிபட்டணம் உச்சி மாகாளியம்மன் கோவில்களில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. கமல காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பக்தர்கள், மனமுருகி வழிபட்டனர்.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில், காசிவிஸ்வ நாதர் சன்னதியில் எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மனுக்கு நேற்று (ஆக., 9ல்) காலை, 9:00 மணிக்கு அபிஷேக, சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.வால்பாறை வாழைத்தோட்டம் காமாட்சியம்மன் கோவில், அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று (ஆக., 9ல்) காலை, 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜை நடந்தது.
எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவிலில் நேற்று (ஆக., 9ல்) காலை, 6:00 மணிக்குசிறப்பு அபிஷேக பூஜையும், 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து, அம்மனை வழிபட்டனர்.