பதிவு செய்த நாள்
12
ஆக
2019
01:08
வாலாஜாபாத்:பார்வதியம்மன் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என, வளத்துார் கிராமத் தினர் எதிர்பார்க்கின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த, வளத்துார் ஊராட்சியில், பார்வதியம்மன் கோவில் குளம் உள்ளது. இக்குளம் அருகே, ஊராட்சி நிர்வாகம், புதிய குளம் வெட்டி தண்ணீரை சேகரித்து வந்தது.மேலும், குளத்தை சுற்றிலும், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், கருங்கற்கள் பதிக்கப் பட்டுள்ளன. சீரமைப்பு பணி மேற்கொண்ட நிலையில், குளத்தை சுற்றிலும் இருந்த சீமைக் கருவேல மரங்களை அகற்றவில்லை. இதை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் முன் வரவில்லை. எனவே, மழைக்காலத்திற்கு முன், சீமைக் கருவேல மரங்களை அகற்றி, குளத்தில் சீரமைப்பு பணி செய்ய வேண்டும் என, கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.