பதிவு செய்த நாள்
12
ஆக
2019
03:08
சென்னை:ஜெருசலேம் புனித பயணத்திற்கு நிதியுதவி பெற, 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள், ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக, தமிழக அரசால், நபர் ஒருவருக்கு, 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.இதற்கான விண்ணப்பங்கள், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அல்லது, www.bcmbcmw.tn.gov.in என்ற இணை யதள முகவரியில், பதிவிறக்கம் செய்து, கட்டணமின்றி பெறலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ’ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம், -2019- - 20’ என்று குறிப்பிட்டு, ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், சேப்பாக்கம், சென்னை -- 5 என்ற முகவரிக்கு, 30ம் தேதிக்குள், தபாலில் அனுப்ப வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 044 - 2852 0033 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.