பதிவு செய்த நாள்
12
ஆக
2019
03:08
கிழக்கு தாம்பரம்: திருவள்ளுவர் தெருவில் உள்ள, வேண்டவராசி அம்மன் கோவிலில், 63வது ஆடித் திருவிழா, 8ம் தேதி துவங்கியது; இன்று (ஆக., 12ல்) நிறைவடைகிறது. முதல் நாள் பந்தக் கால், அம்மன் உத்தரவு கோருதல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் நடந்தன.
இரண்டாம் நாள், பூங்கரகம் திருவீதி உலா, சிறப்பு அலங்காரம், தங்க கவச தரிசனம், திருவிளக்கு வழிபாடுகள் நடந்தன. ஆடி திருவிழாவின் நிறைவு நாளான இன்று 12ம் தேதி காலை, 9:00 மணி முதல், பூங்கரகம் திருவீதி உலா, சந்தன காப்பு தரிசனம் நடக்கிறது. மதியம், 1:00 மணிக்கு, அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (ஆக., 13ல்) அதிகாலை, 3:00 மணிக்கு, அம்மனுக்கு கும்பம் படைத்தல் நிகழ்ச்சியுடன், விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை,முன்னாள் நகராட்சி கவுன்சிலர், வி.ஆர்.சிவராமன் மற்றும் கோவில் நிர்வாகக் குழுவினர் செய்துள்ளனர்.