பதிவு செய்த நாள்
29
மார்
2012
11:03
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்குனி உத்திரத்தையொட்டி ஆண்டாள், ரெங்க மன்னார் திருக்கல்யாண விழா நேற்று துவங்கியது. இதை தொடர்ந்து, காலை கருடாழ்வார் முத்திரை பதித்த கொடி, நான்கு மாட வீதிகளில் சுற்றி வர, கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகளுடன், கோவிந்தாச்சார்ய பட்டர் கொடி ஏற்றினார். தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் குருநாதன், ஸ்தானிகம் ரமேஷ், சுதர்சனன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் இரட்டை தோளுக்கினியானில் ஆண்டாள் ரெங்கமன்னார் புறப்பாடு நடந்தது. ஏப்., 4ல் ஆண்டாள்,ரெங்கமன்னார் தேரில் எழுந்தருளலும், மறுநாள் காலை தேரோட்டம், தொடர்ந்து இரவு 7மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது.