வில்லியனுார்:வில்லியனுார் சிவா-விஷ்ணு ஆஸ்திக சபா பிராமண சங்கம் சார்பில், ஆவணி அவிட்டம் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி, திருக்காமீஸ்வரர் கோவில் வளாகத்தில் நேற்று (ஆக., 15ல்) நடந்தது.விஸ்வநாத குருக்கள் தலைமையில், சிறப்பு ஹோமத்துடன் நடந்த நிகழ்ச்சியில் வில்லியனுார் சிவா-விஷ்ணு ஆஸ்திக சபா பிராமண சங்க தலைவர் பாலசுப்ரமணிய குருக்கள், செயலாளர் கண்ணன் சர்மா, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.50க்கும் மேற்பட்டோர் ஆவணி அவிட்டம் பூணுால் மாற்றிக்கொண்டனர்.