மந்தாரக்குப்பம் தேவி மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2019 03:08
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் தேவி மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத விழாவை யொட்டி செடல் திருவிழா நடந்தது.தேவி மாரியம்மன் கோவிலில் 39ம் ஆண்டு பிரமோற்சவ விழாவையொட்டி கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று முன் தினம் (ஆக., 14ல்) மாலை மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று (ஆக., 15ல்) காலை ஒம்சக்தி கோவிலில் இருந்து முளைப்பாரியுடன், தீச்சட்டி ஏந்தி, அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்தினர். முன்பாக 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது.இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
செடல் உற்சவத்தை முன்னிட்டு நேற்று (ஆக., 15ல்) காலை கணபதி ஹோமம், அபிஷேக ஆராத னை நடந்தது. பக்தர்கள் திரளாக சுவாமி தரிசனம் செய்தனர். அம்மன் சிறப்பு அலங்கார த்தில் வீதியுலா நடந்தது. இன்று 16ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடக்கிறது.