பதிவு செய்த நாள்
16
ஆக
2019
03:08
ஈரோடு: ஈரோடு, காவிரிக்கரை, ராகவேந்திர சுவாமி, ஆஞ்சநேய சுவாமி கோவிலில், ராகவேந்திர சுவாமிகளின், 348வது ஆண்டு ஆராதனை விழா, இன்று (ஆக., 16ல்)தொடங்குகிறது. நாளை (ஆக., 17ல்), நாளை மறுதினம் (ஆக., 18ல்) ஆராதனை நடக்கிறது, தினமும் காலை, 6:00 மணிக்கு வேத பாராயணம், 8:00 மணிக்கு கனகாபிஷேகம், 9:00 மணிக்கு அபிஷேகம், 10:00 மணிக்கு உபன்யாசம் நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு மங்களாரத்தி நடக்கிறது.