பதிவு செய்த நாள்
16
ஆக
2019
03:08
கிருஷ்ணகிரி: இறந்த கோவில் பூசாரிக்காக, 250 ஆண்டுகளுக்கு முன்பு நடுகல் வைக்கப்பட்டு ள்ளது. போரில் உயிர்நீத்த வீரனுக்கும், வேட்டையில் இறந்தவர்களுக்கும் நடுகல் எடுப்பது வழக்கம். ஆனால், கோவில் பூசாரிக்காக நடுகல் எடுப்பது அபூர்வமே. அப்படிப்பட்ட இரண்டு நடுகற்கள் குறித்து, வரலாற்று குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: கிருஷ்ணகிரி அடுத்த, கல்லுக்குறுக்கி பெரிய ஏரி வாய்க்கால் அருகே ராமர் கோவில் வலது புறம், கோவில் பூசாரிக்கு நடுகல் அமைக்கப்பட்டுள்ளது. பூசாரி வலது கையில் மணி, இடது கையில் தூப கிண்ணம் வைத்துள்ளார்.
இவர், இடக்கை பழக்கம் கொண்டவராக இருக்கக்கூடும். தலையில் ருத்ராட்சத மாலை கட்டி யிருக்கிறார். அருகே பூ சேகரிக்கும் கூடையும் உள்ளது. பூசாரி இறந்தவுடன், இவர் மனை வியும் உடன்கட்டை ஏறி இறந்துள்ளார். எனவே, இது சதிக்கல் ஆகும். இதேபோல் ஒரு நடு கல், பெரிய ஏரி ரத்னா நகர் அருகே, பெருமாள் கோவில் வலது புறத்தில் வைக்கப்பட்டு ள்ளது. இதில், பூசாரி இடது கையில் மணி, வலது கையில் தூப கிண்ணம் வைத்துள்ளார். அருகே காளை ஒன்றும் உள்ளது. இந்த இரண்டு நடுகற்களும், 250 ஆண்டுகள் பழமையானது. இதன் மூலம், பூசாரிகளுக்கும் நடுகல் அமைக்கும் மரபு அக்காலத்தில் இருந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வாளர் சுகவன முருகன், குழுத் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங் கிணைப்பாளர் தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.