புவனகிரி: ராகவேந்திரர் பிறந்த புவனகிரியில், 32வது ஆராதனை விழா நேற்று காலை துவங்கியது.
விழா நேற்று காலை 9.00 மணிக்கு, பூர்வ ஆராதனை யுடன் துவங்கியது. பிற்பகல் 1.00 மணிக்கு, பல்வேறு பூஜைகளுக்கு பின் மகான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கவுரவ தலைவர் சுவாமிநாதன், தலைவர் ராமநாதன், செயலர் டாக்டர் உதயசூரியன், பொருளாளர் கதிர்வேலு, அர்ச்சகர்கள் நரசிம்மாச்சாரியார், ரகு ஆச்சாரியார், ரமேஷ் ஆச்சாரியார் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.