Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிகண்டி மதுரை வீரன் மதுரை வீரன்
முதல் பக்கம் » பிரபலங்கள்
புருசுண்டி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 மார்
2012
05:03

கணபதியைப் போல தும்பிக்கை கொண்ட புருசுண்டி: த்ரேதா யுகத்தின் ஆரம்ப காலம் அது. தண்டகாரண்யம் எனும் வனத்தின் துத்தூரம் என்ற பகுதியில், விப்ரதன் என்று ஒரு வேடன் வாழ்ந்து வந்தான். மிருகங்களை வேட்டையாடி, தன்னையும் தன் கூட்டத்தினரையும் பசியின்றிப் பாதுகாத்து வந்தான். திடீரென மழை பொய்க்கவே, வனம் வறண்டது. பறவைகளும் மிருகங்களும் புகலிடம் தேடி, வனத்தை விட்டு அகன்றன. விப்ரதன் தன் கூட்டத்தாருடன் உணவும் தண்ணீருமின்றித் தவித்தான். வேறு வழியின்றி, வழிப்பறிக் கொள்ளையில் இறங்கினான். நல்லவர்கள், சந்தர்ப்பவசத்தால் கூடத் தவறு செய்யலாகாது என்பதால்,அவர்களைத் தடுத்தாட்கொள்பவன் இறைவன். வழிப்பறியில் ஈடுபட்ட முதல் நாள் முதல் ஆளாக, அந்தணன் ஒருவனைப் பின் தொடர்ந்தான் விப்ரதன். இதை அறிந்த அந்தணன் ஓட, அவனைத் துரத்திக்கொண்டு விப்ரதனும் ஓடினான். அந்த வனத்தில் இருந்த பாழடைந்த ஒரு விநாயகர் கோயிலுக்குள் நுழைந்து, மறைந்தான் அந்தணன்.

வேடன் கண்ணப்பனை ஆட்கொள்ள, காளஹஸ்தி தலத்தில் சிவனார் நடத்திய திருவிளையாடலைப் போலவே, இங்கு மகா கணபதி மகத்துவம் ஒன்றைப் புரிந்தார். அந்த கணபதி கோயிலும், அருகில் இருந்த தெய்வீகப் பொய்கையும் விப்ரதனைப் பெரிதும் கவர்ந்தன. அதனால், அவன் அங்கேயே தங்கி விட்டான். உணவுக்கும் தண்ணீருக்கும் ஏதேனும் வழி பிறக்குமா என யோசித்தான். அப்போது, அங்கு முக்கால முனிவர் என்பவர் வந்தார். அவரை வழிமறித்து, கூரிய அம்பால் குத்தி விடுவதுபோல் பயமுறுத்தினான் விப்ரதன். ஆனால் முனிவரோ சற்றும் பதறாமல், கருணை பொங்கும் விழிகளுடன் அவனைப் பார்க்க... மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு போல், அந்தக் கருணைக்குக் கட்டுண்டு, அம்பைக் கீழே போட்டான் விப்ரதன். அவரின் பாதங்களில் விழுந்து வணங்கியவன், அப்படியே மூச்சையானான். தன் கமண்டல நீரால் அவன் முகத்தில் தெளித்த முனிவர் அவனது புறக்கண்களை மட்டுமின்றி அகக்கண்களையும் திறந்தார். என் பாபங்களைப் போக்கி அருளுங்கள் என வேண்டினான் விப்ரதன்.

உடனே முனிவர், அருகில் கிடந்த காய்ந்த மரக்கிளையை எடுத்து, அவனிடம் கொடுத்தார். இந்த மரக்கிளையை, இந்த தடாகத்தின் கரையில் நட்டு, மகா கணபதி மந்திரத்தை தொடர்ந்து ஜபித்து வா! இந்த மரக்கிளை துளிர்விடும்வரை, ஜபிப்பதை நிறுத்தாதே. இது துளிர்க்கும் போது உன் பாவம் நீங்கி புனிதனாவாய்; தேவர்களைப்போல் உயர்ந்தவனாய்! என அருளி, மந்திரத்தையும் உபதேசித்தார். ஏற்கனவே உணவின்றி உபவாசமாக இருந்து, தடாகத்தில் நீராடி, மகா கணபதியை விக்கிரக வடிவில் தரிசித்திருந்த விப்ரதன், உபதேசம் பெறத் தகுதியான நிலையில் இருப்பதை அறிந்து, அவன் தலை மீது கை வைத்து, ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், க்லீம், க்லௌம், கம், கணபதயே நமஹ! என்கிற மகிமை மிகு மகா கணபதி மந்திரத்தை உபதேசித்தார், முனிவர். வளைந்த துதிக்கையும் பேருடலும், கோடி சூரியனின் பேரொளியைக் கொண்டவருமான கணபதி தேவா! எல்லா நற்காரியங்களும் தடையின்றி நடக்க அருள்புரிவீராக! எனும் பொருள் கொண்ட, வக்ரதுண்ட மஹாகாய, சூர்ய கோடி ஸமப்ரபா, அவிக்னம் குருமே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா என்ற கணபதி காயத்திரியையும் உபதேசித்தார்.

பிறகு, முனிவர் சொன்னப்படி ஜபத்தில் ஈடுபடலானான் விப்ரதன். காலங்கள் ஓடின. அன்ன ஆகாரம் இன்றி, அவன் செய்த தவத்துக்குப் பலன் கிடைத்தது. காய்ந்த அந்த மரக்கிளை, துளிர்க்கத் துவங்கியது. தன்னையே அனுமனாக பாவித்துக் கொண்டு, தீவிரமாக ராமஜபம் செய்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸருக்கு வால் முளைத்ததாக ஸ்ரீராமகிருஷ்ண வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், நம்பிக்கையுடன் கணபதி மந்திரத்தை இடையறாது உச்சரித்த விப்ரதனுக்கு, கணபதியைப் போலவே தும்பிக்கை வளர்ந்தது. அவன் முன் தோன்றிய விநாயகர், மகனே, பக்தியுடன் எனது மந்திரத்தை ஆழ்ந்து ஜபித்தால், நீயும் என் போன்ற உருவத்தைப் பெற்றுவிட்டாய். புருவங்களுக்கு மத்தியில் தும்பிக்கையைப் பெற்றிருப்பதால், நீ புருசுண்டி என அழைக்கப்படுவாய். உனது மந்திர பலத்தால் துளிர் விட்ட இந்த மரம், கற்பக விருட்சமாகிவிட்டது. எந்தச் செல்வத்தைக் கேட்டாலும், அதைத் தரும் வல்லமை இதற்கு உண்டு. என்ன வரம் வேண்டும், கேள்! என அருளினார். இதில் சிலிர்த்தவன், தங்களின் தரிசனமே கிடைத்து விட்டது. இதற்கு மேல் வேறு என்ன வேண்டும், சுவாமி! தங்களின் திருவடியைச் சரணடைந்து தொண்டாற்றுகிற பாக்கியம் மட்டுமே போதும்!  என்றான். சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கினைக் கடைப்பிடித்து, விரைவில் எம்மை அடைவாயாக! என்று அருளி மறைந்தார் மகா கணபதி. அப்படியே செய்யத் துவங்கினார் புருசுண்டி.

அவரின் பெருமையை நாரதர் மூலம் அறிந்த தேவேந்திரன், புருசுண்டியைத் தரிசிக்க பூலோகம் வந்தான். தவத்தின் ஈடுபட்டிருந்த புருசுண்டியிடம் பக்தனாக, யாசகனாக வந்து நின்றான் தேவேந்திரன். எது கேட்டாலும் தருவதாகக் கூறிய புருசுண்டியிடம், கற்பக விருட்சத்தைத் தரும்படி கேட்டான், அதன்படி, கற்பக விருட்சத்தை தேவேந்திரனுக்குத் தானமாகத் தந்தருளினார் புருசுண்டி. விநாயகர் தந்ததையே மனமுவந்து தானமாக இந்திரனுக்கு வழங்கிய அந்தக் கணத்தில், அங்கு தோன்றிய மகா கணபதி, புருசுண்டியை தன் திருப்பாதத்தால் சேர்த்துக் கொண்டு அவருக்குப் பிறவா நிலையை அருளினார். தவம் சிறந்தது. அதிலும், தவத்தின் பலனையே தானமாகத் தருவது மிகச் சிறந்தது எனும் உயரிய தத்துவத்தை இதன் மூலம் உலகுக்கு உணர்த்தியுள்ளார் விநாயகப்பெருமான்.

 
மேலும் பிரபலங்கள் »
temple news

குணவதி மார்ச் 08,2017

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்
 
temple news

துகாராம் பிப்ரவரி 03,2017

பாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்
 
temple news

விராதன் டிசம்பர் 14,2016

ராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்
 
temple news
திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்
 
temple news

உபகோசலன் அக்டோபர் 18,2016

சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar