பதிவு செய்த நாள்
18
ஆக
2019
12:08
திருப்பூர்:அக்ரஹாரப்புத்துார், ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவிலில், உலக நலன் வேண்டி, ஸ்ரீநவசண்டி மஹா யாகம் நேற்று நடந்தது.மங்கலம், அக்ரஹாரப்புத்துாரில் உள்ள ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில், நுாற்றாண்டு பழமை வாய்ந்தது. கோவிலில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
உலக மக்கள் நன்மைக்காக, பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று, நவசண்டி மஹா யாகம் நடந்தது.அக்ரஹாரப்புத்துார், சின்னப்புத்துார், வேட்டுவ பாளையம், பொங்கியகவுண்டன்புதுார் கிராம மக்கள் சார்பில், மகாயாகம் நடந்தது. மலைக்கோவில் ஸ்ரீ குழந்தை வேலாயுதசாமி கோவில் அர்ச்சகர்கள், நவசண்டியாக சர்வசாதகம் நிகழ்த்தினர்.நேற்று முன்தினம் காலை, கணபதி ேஹாமம், நவக்கிரஹ ேஹாமம், கலச ஸ்தாபனம், திருவிளக்கு வழிபாடு, கலச பூஜை, தேவி பாராயணம், பலிபூஜைகள் நடந்தன. நேற்று காலை, கலச பூஜை, 1008 அர்ச்சனை, 308 அர்ச்சனை, 108 அர்ச்சனையும், அதனை தொடர்ந்து, நவசண்டியாகம் துவங்கியது.யாக பூஜைகளை தொடர்ந்து, அம்மனுக்கு மகா அபிேஷகமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. அறுபடை முருக பக்தர் பேரவை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.