பதிவு செய்த நாள்
18
ஆக
2019
12:08
கம்பைநல்லூர்: கம்பைநல்லூர் அருகே, மழை வேண்டி பெண்கள் பால்குடம் மற்றும் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்தனர். தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த கே.ஈச்சம்பாடியில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் வழிபாட்டு மன்றம் சார்பில், மழை வேண்டி பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நடந்தது. முன்னதாக பகல், 12:00 மணிக்கு, ஈச்சம்பாடி தென்பெண்ணையாற்றில், கரகம் அலங்கரிக்கப்பட்டு, சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. பின், அங்கிருந்து பெண்கள் பால்குடம், பூங்கரகம், தீச்சட்டி, கஞ்சி சட்டி ஆகியவற்றை முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாக, ஓம்சக்தி கோவிலுக்கு எடுத்து வந்தனர். அங்கு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.