மானாமதுரை கோயில் விழாவில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஆக 2019 12:08
மானாமதுரை : மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் அலங்கார குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழா கடந்த 7 ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கல்யாணம்12 ந் தேதியும்,தேரோட்டம் 15 ந் தேதியும் நடைபெற்றது. விழா நாட்களின் போது சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிவுலா நடைபெற்றது.நேற்று முன்தினம் காலை தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக வீரஅழகர் வெள்ளைக் குதிரை வாகனத்தில் கோயிலில் இருந்து கிளம்பினார், அவரை பட்டத்தரசி கிராமத்தார்கள் மேள,தாளங்கள் முழங்க வரவேற்று அழைத்துச் சென்றனர்.
அங்கிருந்து மாலை தீர்த்தவாரிக்காக சக்கரத்தாழ்வார் சிலையுடன் அர்ச்சகர்கள் கோபிமாதவன்,பாபுஜி மற்றும் கிராம மக்கள் தாயமங்கலம் ரோட்டில் உள்ள புனித அலங்காரகுளத்திற்கு சென்றனர். இந்த வருடம் குளத்தில் தண்ணீர் இல்லாததால் தற்காலிகமாக கட்டப்பட்டிருந்த தொட்டியில் நிரம்பியிருந்த தண்ணீரில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியை அர்ச்சகர்கள் நடத்தினர்.பின்னர் சக்கரத்தாழ்வாருக்கு பல்வேறு பொருட்களால் அபிேஷகம் செய்து தீபாராதனை செய்தனர். மதியம் அன்னதானமும், இரவு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை பட்டத்தரசி கிராமத்தினர் செய்திருந்தனர்.