பதிவு செய்த நாள்
19
ஆக
2019
01:08
உத்திரமேரூர்: திருமுக்கூடல், ஆதிபுரீஸ்வரர் கோவிலில், திருவிளக்கு பூஜை மற்றும் மகா தீபாராதனை, நேற்று முன்தினம் (ஆக., 17ல்) நடந்தது.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமுக்கூடலில், பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில், ஆனந்தவல்லி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், ஆடி மாதத்தையொட்டி, தினமும் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடந்து வந்தன.ஆடி மாதம் நிறைவு பெற்றதையடுத்து, நேற்று முன்தினம் (ஆக., 17ல்) இரவு, திரு விளக்கு பூஜை வழிபாடு மற்றும் மகா தீபாராதனை நடந்தது.முன்னதாக, அன்று காலை, 11:00 மணிக்கு, அப்பகுதி விநாயகர் கோவிலில் இருந்து, 108 பெண் பக்தர்கள், பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.