பரமக்குடி : பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் 27ம் ஆண்டுஆவணி திருவிழா ஆக. 9ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன்துவங்கியது.
தொடர்ந்து தினமும் சாத்தாயி அம்மன் பல்வேறுஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித் தார். முக்கிய விழாவானபால்குட விழாவையொட்டி, பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளில் வலம் வந்து கோயிலை அடைந்தனர்.
பின்னர் சாத்தாயி அம்மனுக்கு பாலாபிஷேகம்,தீபாராதனைகள் நடந்தன. இதில் பரமக்குடி, மதுரை உள்ளிட்டபல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாலையில் நடந்த திருவிளக்கு பூஜையில்ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். மூலவர் அன்னபூரணி அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு சாத்தாயி அம்மன் நகரில் வீதிவலம் வந்தார். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆயிர வைசிய மஞ்சப்புத்துார் மகாசபை உறவின்முறை குடிமக்கள் செய்திருந்தனர்.