முதுகுளத்துார் : முதுகுளத்துார் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் முடிந்து 48 வது நாள் மண்டலபூஜை நடைபெற்றது. காலை 6:00 மணிக்கு விநாயகருக்கு பால், சந்தனம், பன்னீர் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடு களை போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர்கள் செய்தனர்.