வடமதுரை : வடமதுரை சித்துார் பொய்கை கன்னிமார், கருப்பணசுவாமி கோயிலில் 3 நாள் உற்ஸவ திருவிழா நடந்தது.காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில் விநாயகர், பெரியாண்டவர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், தீர்த்த, பால் குடங்களுடன் ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் கன்னியார், கருப்பணசுவாமி தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிப்பட்டனர். மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டி நேர்த்திக்கடன் என பல்வேறு பாரம் பரிய வழிபாடுகள் நடந்தன.