பதிவு செய்த நாள்
30
ஆக
2019
12:08
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா சர்ச் ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன துவங்கியது.
* பெசன்ட்நகர்: -பெசன்ட் நகர், அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின், 47ம் ஆண்டு பெருவிழா, நேற்று 29ல் கொடியேற்றத்துடன், கோலாகலமாக துவங்கியது. இதில், பல்லாயிரக்கணக் கானோர் பங்கேற்றனர்.
பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின், 47ம் ஆண்டு பெருவிழா, ’இறைவனின் நற்கருணைப்பேழை மரியாள்’ எனும் தலைப்பில், இந்தாண்டு கொண்டாடப்படுகிறது.
பெருவிழா, நேற்று 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு, காலை, தமிழ், ஆங்கிலத்தில் திருப்பலிகள் நடந்தன. காலை முதல் சென்னை புறநகரின் பல பகுதிகளில் இருந்தும், பல்லாயிரக்கணக்கானோர், பெசன்ட் நகர், அன்னை வேளாங்கண்ணி கோவில் கொடியேற்றத்திற்கு, பாதையாத்திரயைாக வந்தனர்.
மாலை, 4:45 மணிக்கு, புனித ஆரோக்கிய மாதா கொடி ஏந்திய தேர்பவனி, ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு, பிரதான சாலைகள், எலியட்ஸ் கடற்கரை சாலை வழியாக, கோவில் வளாகத்தை வந்தடைந்தது.தொடர்ந்து, மாலை, 5:55 மணிக்கு, சென்னை, மயிலை உயர் மறைமாவட்ட பேராயர், ஜார்ஜ் அந்தோணிசாமி, ஆரோக்கிய மாதா கொடியை ஏற்றி, விழாவை துவக்கி வைத்தார்.
கோவில் வளாகத்தில் குழுமியிருந்த ஏராளமான பக்தர்கள், வலது கையினை உயர்த்தி, ’மரியே வாழ்க’ என கோஷமிட்டனர். கொடியேற்றத்தின் போது, சிலுவை ஏந்தி, பலுான்கள் பறக்க விடப்பட்டன.
விழாவில், ஆலய அதிபரும், பங்கு தந்தையுமான, வின்சென்ட் சின்னதுரை, திருச்சபைகளின் பங்கு தந்தைகள், குருக்கள், ஆலய அதிபர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற் றனர். பக்தர்கள் வசதிக்காக, சென்னை மாநகராட்சி, சுகாதாரத்துறை, காவல்துறை, தீயணை ப்பு துறையினர், சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.கொடியேற்ற விழாவை தொடர்ந்து, ’நற்கருணை இறையன்பின் கொண்டாட்டம்’ எனும் தலைப்பில், சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது.
செப்., 8ம் தேதி வரை நடத்தப்படும் இப்பெருவிழாவில், இன்று 30ல், இளையோர் விழா, நாளை பக்த சபைகள் விழா நடக்கிறது. செப்., 1ம் தேதி முதல், நற்கருணை பெருவிழா, தேவ அழைத் தல் விழா, உழைப்பாளர் விழா, நலம் பெறும் விழா, ஆசிரியர்கள் விழா, குடும்ப விழா ஆகியவை, ஒவ்வொரு நாளும் நடக்கிறது.
முக்கிய நிகழ்வாக, செப்., 7ம் தேதி, அன்னையின் ஆடம்பர தேர்பவனி திருவிழா நடக்கிறது. செப்., 8ம் தேதி, அன்னையின் பிறந்தநாள் மற்றும் திருத்தலத்தின், 47வது ஆண்டு விழா நடக்கிறது.விழாவை முன்னிட்டு, தினமும், காலை, மாலை வேலைகளில், சிறப்பு திருப் பலிகள் தமிழ், ஆங்கிலத்தில் நடக்கின்றன.