ஊட்டி தேவாலயங்கள் சீரமைப்புக்கு நிதி பெற விண்ணப்பிக்கலாம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2019 02:08
ஊட்டி:’கிறிஸ்தவ தேவாலயம் சீரமைத்தல் பணிக்கு நிதி தேவைப்படுவோர் விண்ணப்பிக்க வேண்டும்,’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை:தமிழகத்தில் சொந்த கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமை த்தில் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிக்காக அரசு, 1 கோடி ரூபாயை, சிறுபான்மையினர் நலத்துறைக்கு ஒதுக்கியுள்ளது. தகுதியின் அடிப்படையில் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இதற்காக,தேவாலாயங்களிலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பபடிவம் மற்றும் சான்றிதழை www.bcmbcmw@tn.gov.inஎன்ற இணைய தள முகவரி யில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.