வானுார்: வானுார் அடுத்த கொடுவூரில் கொன்றைவார்குழலி உடனுறை கொடுவூரப்பன் கோவில் திருப் பணி முடிந்து நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.நேற்று 2ம் தேதி விநாயகர் வேள்வி நடந்தது. இன்று 3ம் தேதி காலை நவகோள்கள் வழிபாடு நடக்கிறது. மாலை கலச வேள்வியும், யாக சாலை பூஜையும் நடக்கிறது. நாளை 4ம் தேதி காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை நடக்கிறது. காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:15 மணிக்கு கும்பாபி ஷேகம் நடக்கிறது.மயிலம் பொம்மபுரம் ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் திருக்கழுக் குன்றம் தாமோதரன் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடக்கிறது.