பதிவு செய்த நாள்
04
செப்
2019
01:09
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே ஆனைமலையில், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், பிரதி ஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், விசர்ஜனம் செய்யப்பட்டன.பொள்ளாச்சி, ஆனை மலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையையொட்டி, இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.
விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று 3ம் தேதி வி.எச்.பி., சார்பில், பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளில், 27 சிலைகள் முதற்கட்டமாக, உப்பாற் றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. ஆனைமலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.