பதிவு செய்த நாள்
04
செப்
2019
01:09
வெள்ளகோவில்:வெள்ளகோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் விசர்ஜன ஊர்வலம் நடந்தது.
வெள்ளகோவில் சுற்றுப்பகுதியில், இந்து முன்னணி சார்பில், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நேற்று 3ம் தேதி நடந்தது. முன்னணி ஒன்றிய தலை வர் சுரேஷ் குமார், வடக்கு நகர தலைவர் கோபிநாத், தெற்கு ஒன்றி யம் யுவராஜா, சதீஸ்வரன், விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் சந்திரசேக ரன், சரவணன் மற்றும் பா.ஜ.க., அமைப்பு சாராஅணி மாநில செயலாளர் பன்னீர்செல்வம், நகர் அமைப்பாளர் விஜயன், உட்பட பலர்பங்கேற்றனர்.
வீரக்குமார் கோவில் வளாகத்திலிருந்து, 22 விநாயகர் சிலைகள் வாகனத்தில் வைத்து ஊர்வ லம் துவங்கியது. கோவை - திருச்சி ரோடு, கடைவீதி வழியாக முத்துார் ரோடு, புதிய பஸ ஸ்டாண்ட் வரை விஜர்சன ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தின் நிறைவாக, காவிரியாற்றில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது.