காளையார்கோவில் தெப்பத்தில் 13 விநாயகர் சிலைகள் கரைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2019 02:09
சிவகங்கை:காளையார்கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 13 சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று தெப்பக்குளத்தில் விஜர்சனம் செய்தனர்.
சதுர்த்தியை முன்னிட்டு களிமண்ணால் தயாரிக்கப்பட்ட 13 விநாயகர் சிலைகள் நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டன. நேற்று 3ம் தேதி அச்சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று தெப்பக்குளத்தில் கரைத்தனர்.
ஊர்வலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பஸ் ஸ்டாப் அருகே உள்ள விநாயகர் கோயிலில் துவங்கி, தொண்டி மெயின்ரோடு வழியாக காளீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தை அடைந்தது சிறப்பு பூஜைக்கு பின் சிலைகளை நீரில் விஜர்சனம் செய்தனர். ஊர்வலத்தை பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா துவக்கி வைத்தார். மாநில பேச்சாளர் சக்திவேல், மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட துணை தலைவர் குணசேகரன், ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் பா.ஜ., ஒன்றிய தலைவர் சிவாசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.