திருவாடானை: திருவாடானை மேலரதவீதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஆக.,27ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார ங்கள் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று 3ம் தேதி ஏராளமான பக்தர்கள் பால், பறவை, வேல் காவடிகள் எடுத்து பூக்குழி இறங்கினர். அதனை தொடர்ந்து இரவில் பெண்கள் பூ தட்டு எடுத்தலும், சுவாமி ஊர்வலம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.