வாடிப்பட்டி: சமயநல்லுார் அருகே தேனுார் சின்னம்மாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி கணபதி ஹோமம், இரண்டு காலயாக பூஜைகள் நடந்தன. பரமேஸ்வர பட்டர் தலைமையில் நேற்று 5ம் தேதி காலை கடம் புறப்படாகி கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப் பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்தனர்.