பதிவு செய்த நாள்
06
செப்
2019
01:09
கோவை: கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்ட, 282 விநாயகர் சிலைகள் நேற்று 5ம் தேதி விசர்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில், கோவை யில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன; சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திரளான மக்கள் விநாயகரை வழிபட்டு சென்றனர்.நேற்று 5ம் தேதி குனியமுத்துார் சுற்றுப் பகுதிகளில் வைக்கப்பட்ட, 57 சிலைகள்; குறிச்சி, வெள்ளலுார் சுற்றுப் பகுதிகளில் வைக்கப்பட்ட, 132 சிலைகள் குறிச்சி குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
மதுக்கரை, செட்டிபாளையம் சுற்றுப் பகுதிகளில் வைக்கப்பட்ட, 42 சிலைகள் வாளையார் அணையில் விசர்ஜனம் செய்யப்பட்டன. இதேபோல், முத்தண்ணன் குளத்திலும் சிலைகள் கரைக்கப்பட்டன. நேற்று 5 ம் தேதி மட்டும், கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், 282 சிலைகளின் விசர்ஜனம் நடந்தது. வீடுகளில் வைக்கப்பட்ட நுாற்றுக்கணக்கான சிறு விநாயகர் சிலைகளை, பொதுமக்கள் குடும்பம் சகிதமாக வந்து, குளங்களில் விசர்ஜனம் செய்தனர்.