புவனகிரி: புவனகிரி தாலுகா, மருதுார் தலைக்குளத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கடந்த 2 ம் தேதி அனுக்ஞை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் விழா துவங்கியது. 3 ம் தேதி பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் (செப்., 4ல்) காலை 6.00 மணிக்கு இரண்டாம் யாக சாலை வேள்வி பூஜை நடந்தது.பின்னர் கடம் புறப்பாடு துவங்கி, கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மருதுார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.