செஞ்சி : செஞ்சி கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு சிறப்பு பஜனை நடந்தது. செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கிருஷ்ணவேணி தாயார், கோதண்டராம சுவாமி கோவிலில் ஸ்ரீராம நவமி நடந்தது. இதனை முன்னிட்டு கோதண்டராமருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து ஆண்டாள் மற்றும் பாகவத கோஷ்டிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட சிறப்பு பஜனை நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீகோதண்டராம சுவாமி அறக்கட்டளை நிர்வாகி துரை ரங்க ராமானுஜதாசர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.