பதிவு செய்த நாள்
09
செப்
2019
01:09
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார், திருமங்கையாழ்வார் குளத்தில், நவீன கால சிலை கண்டெடு க்கப்பட்டது.ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான திருமங்கை யாழ்வார் குளம் உள்ளது.பராமரிப்பின்றி துார்ந்திருந்த, இந்த குளத்தை, துார்வாரும் பணியை, தனியார் அமைப்பினர் மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில், 4ம் தேதி இரவு, குளத்தில் உள்ள சேற்றை, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அள்ளியபோது, 2.5 அடி உயர சிலை, கை உடைந்த நிலை யில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலை, கூரத்தாழ்வார் சிலை என, கூறப்படுகிறது.’இந்த சிலை, பழமையான சிலை இல்லை; நவீன கால சிற்பம். செதுக்கும் போது, கை உடைந்ததால், அந்த சிலையை, கோவில் குளத்தில் யாராவது வீசியிருக்கலாம்’ என, சமூக ஆர்வலர்கள் கூறினர்.