மேலுார்:மேலுார் தாலுகா வெள்லுார் அருகே அருவியூர் சித்தி புத்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.இதை முன்னிட்டு செப்., 7 ல் கணபதிஹோமம், நவக்கிரஹ ஹோம த்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று (செப்., 8ல்) பிச்சை சிவாச்சார்யார் கும்பத்தில் புனித தீர்த்தத்தை ஊற்றி கும்பாபிஷேகம்நடத்தினார். மூவருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு கள் நடந்தன. சுற்றியுள்ள கிராமத்தினர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.