க.பரமத்தி: குப்பம் பஞ்சாயத்து வேலாயுதம்பாளையம் ஸ்ரீ கருப்பண்ண ஸ்வாமி மற்றும் மதுரை வீரன் ஆகிய கோவில்களின் மூன்றாமாண்டு நிறைவு விழா நேற்று தொடங்கியது. பிரசித்தி பெற்ற கருப்பண்ண ஸ்வாமி மற்றும் மதுரை வீரன் கோவில் கடந்த மூன்றாண்டுக்கு முன்பு மூன்று லட்ச ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு கடந்த 2008 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் விழா கொண்டாடப்படுவது வழக்கம். நேற்று காலை மூன்றாமாண்டு நிறைவு விழாவையொட்டி காவிரியாற்றிலிருந்து தீர்த்தம் காவடி எடுத்து சென்று பக்தர்கள் ஸ்வாமி வழிப்பட்டனர். இன்று (3ம் தேதி) காலையில் பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை குப்பம் பஞ்சாயத்து தலைவர் பெரியசாமி மற்றும் வேலாயுதம்பாளையம் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.