பதிவு செய்த நாள்
09
செப்
2019
03:09
தேவரியம்பாக்கம்:வாலாஜாபாத் அடுத்த, தேவரியம்பாக்கம் கிராமத்தில், தாந்தோன்றியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நடப்பாண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு, 3ம் தேதி, பெண் கள் ஊரணி பொங்கலிட்டனர். நேற்று முன்தினம் (செப்., 7ல்) வரை, காலை மற்றும் மாலை நேரங்களில் கரக ஊர்வலம் நடந்தது. நேற்று (செப்., 8ல்) காலை, 9:00 மணிக்கு, தாந்தோன்றியம் மனுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.
வேப்பஞ்சேலை அணிந்து, காப்பு கட்டிய பக்தர்கள், காலை, 11:00 மணிக்கு நேர்த்தி கடன் செலுத் தினர். மதியம், 1:00 மணிக்கு, அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்வு நடந்தது.