பதிவு செய்த நாள்
09
செப்
2019
03:09
காஞ்சிபுரம்:ஒலிமுகமதுபேட்டையில் கட்டப்பட்டு வரும், பக்தர்கள் தங்கும் விடுதி பணியை, விரைந்து முடிக்க வேண்டும் என, அறநிலையத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம், ஒலிமுகமதுபேட்டை லாலா தோட்டம் பகுதியில், ’பிரஷாத்’ திட்டத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடமும், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில், ’யாத்திரி நிவாஸ்’ திட்டத் தில், பக்தர்கள் தங்கும் அறைகளும் கட்டப்படுகின்றன.
இதில், லாலா தோட்டம் பகுதியில், யாத்ரீகர்கள் தங்க, வசதியான அறைகள் கட்டும் பணி, ஆமை வேகத்தில் நடக்கிறது.இந்த பணி முடிந்தால், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள், அங்கு நிறுத்தவும், குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதியும் கிடைக்கும். இதனால், காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய கோவில்களில், வாகன நெருக்கடி குறையும்.இந்நிலையில், ஹிந்து அறநிலையத் துறை ஆணையர், பணீந்திர ரெட்டி, யாத்திரி நிவாஸ் திட்ட பணியை, நேற்று 8ம் தேதி, பார்வையிட்ட பின், பணியை விரைந்து முடிக்க வேண்டும். என, உத்தரவிட்டார்.